புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2026 - கண்காட்சி
உலகத் தமிழ்க் கல்விக் கழகம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டை நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் பல நாடுகளில் இருந்து தமிழ்கல்வித் துறையில் ஈடுபட்ட தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்கின்றனர்.இம்மாநாட்டை வரும் 2026ல், சென்னை அண்ணா நூலகம், சென்னை, இந்தியாவில் நடத்த உள்ளது.
தமிழ் கலாச்சாரக் கண்காட்சி
இந்த மாநாட்டின் ஒரு முக்கிய அம்சமாக, தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு, வாழ்வியல், கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஒரு பெரும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
இக்கண்காட்சியில் தமிழ் இலக்கியங்கள், தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் மற்றும் அவர்கள் உருவாக்கிய கலைகள், கட்டிடங்கள், வீரர்களின் தியாகங்கள், முத்தமிழின் பெருமைகள் ஆகியவை வெளிப்பாடாக நிறையக் காணப்படும். இவை அனைத்தும் மாணவர்களின் படைப்பாற்றலால் உருவாக்கப்பட்டு, அவர்களின் பார்வையில் தமிழ்ச் செழுமையை எடுத்துக் காட்டும் வகையில் அமையும்.
வெவ்வேறு கலாச்சார சூழலில் வளர்ந்து வரும் மாணவர்களுக்குத் , தங்கள் தமிழ் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் ஆழமாகப் புரிந்து கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பு ஆகும்.
படைப்பாற்றல் வெளிப்பாட்டு மேடை:
இந்தக் கண்காட்சி மாணவர்களின் திறமைகள், சிந்தனைகள், மற்றும் கலைநுணுக்கங்களை வெளிப்படுத்தும் சிறந்த தளமாகும். இதில் பங்கேற்பதன் மூலம் மாணவர்கள் தங்களை வெளிப்படுத்தவும், புதியவற்றைக் கற்க , மற்றும் உலகின் பல பாகங்களில் இருந்து வரும் மற்ற மாணவர்களுடன் இணைந்து கருத்துகளைப் பகிரவும் முடியும்.
உலகத் தமிழ்க் கல்விக் கழகம், இம்மாநாட்டின் கண்காட்சி மற்றும் நிறைவு விழாவில் பங்குபெற மாணவர்களையும், அவர்களின் படைப்புகள் மற்றும் திட்டப்பணிகளைவும் அன்புடன் வரவேற்கிறது.
கண்காட்சி குழுவினர் : சுபா ராஜேஷ் & நித்யவதி சுந்தரேஷ்
மின்னஞ்சல்: dtec.exhibition@
மாநாடு குறித்த விவரம்:
தேதி: ஜூலை 3, 4, 5
இடம்: அண்ணா நூலகம், சென்னை, இந்தியா.
ஜூலை 3 மற்றும் 4 ஆம் தேதி : மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிட வரவேற்கப்படுகிறார்கள்
நேரம்: 10:00 – 12:00 மற்றும் 2:15 – 3:45.
நிகழ்ச்சி நிரல்:
03/07/2026 வெள்ளிக்கிழமை, ஜூலை 3 – கண்காட்சி நேரம் :10:00 – 12:00 மற்றும் 2:15 – 3:45.
04/07/2026 சனிக்கிழமை, ஜூலை 4 : 10:00 – 12:00 மற்றும் 2:15 – 3:45.
05/07/2026 ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5 – நிறைவு விழா 10.00 – 12.30
இம்மாநாட்டு கண்காட்சியில் பங்கு கொள்ளவும், பார்த்துப் பயனுறவும் அனைவரையும் அழைக்கிறோம். பார்வையாளராக கலந்து கொள்ள, கண்காட்சியில் பங்கேற்க, கட்டணம் எதுவும் இல்லை. அனைவரும் கலந்து கொண்டு இம்மாநாட்டைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஒரு நாள் சுற்றுலா (தமிழர் கட்டிடக்கலை அறிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பு)
திரு. ஹேமந்த், உங்கள் அன்பன் ஹேமந்த் என்கிற பெயரில் தமிழ், தமிழர், தமிழ்நாடு சார்ந்த பல செய்திகளை Youtube ல் மிக எளிய முறையில் விளக்கும் தரும் இவர், மாணவர்களை மகாபலிபுரம் அழைத்துச் சென்று அதன் பின்னணியில் உள்ள வரலாற்றை விளக்கவுள்ளார். விருப்பம் உள்ள மாணவர்கள், அவர்களுடன் வரும் பெற்றோர் இதில் கலந்துக் கொள்ளலாம். இது நம் மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு என்பதால் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இது உலகத் தமிழ்க் கல்விக்கழகம் ஏற்பாடு செய்யும் சுற்றுலா அல்ல.
ஜூலை 2ஆம் தேதி, 2026 அன்று காலை 8:00 மணிக்கு சென்னையில் உள்ள Novotel hotel லிருந்து புறப்பட்டு மாலை 5:00 மணிக்கு திரும்புவர். காலை சிற்றுண்டி, மதிய உணவு , மற்றும் மாலையில் snacks வழங்கப்படும். கட்டணம்;ரூ.2000/-
மீண்டும் DTEC 2026 மாநாட்டிற்கு உலகத் தமிழ்க் கல்விக்கழகம் சார்பாக உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு, www.itadtec.org என்ற வலைத்தளத்தைப் பார்க்கவும்.
நன்றி.
