

28ஆவது அகவையில் பெருமையுடன் நடத்தும்
4ஆம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு – 2026
ஜூலை 3, 4 & 5 – 2026
அண்ணா நூற்றாண்டு நூலகம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம்,
சென்னை, தமிழ்நாடு 600085, இந்தியா.
புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2026
DIASPORA TAMIL
EDUCATION CONFERENCE 2026
உலகத் தமிழ்க் கல்விக்கழகம்
தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரப்பவும் இளைய தலைமுறைக்குத் தங்கள் வேர்களை அடையாளம் காட்டவும் நிறுவப்பட்ட “கலிஃபோர்னியா தமிழ்க் கல்விக்கழகம்”, இன்று “உலகத் தமிழ்க் கல்விக்கழகமாக” வளர்ந்துள்ளது.
உலகத் தமிழ்க் கல்விக்கழகம் 1998 இல் நிறுவப்பட்டது. இது புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தமிழ் கற்பிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. எங்கள் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் அமைப்பாளர்களும் தமிழ் மொழியின் மீது ஆர்வமுள்ள தன்னார்வத் தொண்டர்களாவர். தமிழ் கற்றலில் இளைய தலைமுறையினரின் தேவைகளை நிறைவு செய்வதையும் நோக்கமாகக்கொண்டு செயல்படுகிறோம். மாணாக்கர் ஒரு கல்வியாண்டின் முடிவில் மொழித் தர மதிப்பீட்டின் ஓர் நிலையிலிருந்து அடுத்த நிலையினை அடைகின்றனர். நாங்கள் அனைவரும் உலகத் தமிழ்க் கல்விக்கழகத்தின் அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறோம்.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழை எளிமையாகக் கற்கவும், கற்பிக்கவும், கற்றவைகளைப் பகிர்ந்து கொள்ளவும், உலகெங்கிலும் உள்ள அனைத்துத் தமிழ்க் கல்வியாளர்களுடன் இணைந்து உலக தமிழ்க் கல்விக்கழகம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டை நடத்தி வருகிறது.
மாநாட்டின் மையக்கரு
அயலகத் தமிழ்க் கல்விக்கான பொதுவான தர நிலைகள்
தொழில்நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவுத் திறனையும் ஒருங்கிணைப்பதனால் மொழி கற்பித்தலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. புலம்பெயர் தமிழ்க் கல்வி மாநாடு 2026, தமிழ்க் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மனித கல்வியாளர்களின் முக்கியத்துவத்தை புறக்கணிக்காமல் இயந்திர நுட்பங்களைக் கவனமாகப் பயன்படுத்துவதே நாம் எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க சவாலாகும். மேலும் பல்வேறு கற்றல் திறன்களைக் கொண்ட மாணவர்களுக்கும் பயன்படக்கூடிய கற்றல் உத்திகளை கண்டறியும் முயற்சியையும் இம்மாநாடு மேற்கொள்கிறது. பேச்சுத் தமிழின் முக்கியத்துவம், நவீன மதிப்பீட்டு முறைகள் மற்றும் தரப்படுத்துதல் ஆகியவற்றில் உள்ள தேவைகள், மாற்றங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சியையும் இந்த மாநாடு கவனத்தில்கொள்கிறது. இவை அனைத்தும் வகுப்பறையில் தமிழாசிரியரின் தேவையை உறுதிப்படுத்துகின்றன. மேற்கண்ட குறிக்கோள்களை மையமாகக் கொண்டு, அயலக மொழி தரநிலைகளின் அடிப்படையில், பயனுள்ள மொழி கற்பித்தல் முறைகள் மற்றும் சாத்தியக்கூறுகளை ஆராயும் ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க உங்களை அழைக்கிறோம்.
மாநாட்டு நிகழ்வுகள்

ஆய்வுக்கட்டுரைகள்
Paper Presentation
பன்னாட்டுத் தமிழறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கப்பட உள்ளன. தாங்களும் அதில் பங்கேற்று, கட்டுரை வழுங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Research Paper Presentations by Tamil Scholars from Around the World

பயிற்சிப்பட்டறைகள்
Workshops
கற்றல் மற்றும் கற்பித்தல் உத்திகள் பயிற்சிப்பயிலரங்கங்கள்
Learning and Teaching Techniques in-person workshops

தமிழின் குரல்கள்
Voices of Tamil
வெளிநாடுகளில் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்க்கு தமிழ் கற்பித்தல் பற்றிய குழு விவாதங்கள்
Panel discussion on Tamil Schools in our country and Diaspora Tamil Education

மாணவர் ஆய்வுக் கட்டுரைகள்
Students Paper Presentation
For Tamil learners in diasporic communities…
Here is an opportunity for past & current students to present papers
கண்காட்சி
Exhibition
தமிழ்க் கல்வி, தமிழர்கலாச்சாரம் மற்றும் தமிழர்வரலாறு ஆகியவற்றைக் காட்சிப்படுத்தி விளக்குவதாக அமையும்.
The exhibition will display and demonstrate Tamil education, culture, and history.

புலம்பெயர் சூழலில் தமிழ்க் கல்வி
Tamil Education in the Diaspora
Tamil Diaspora youth can shape the growth of their roots, language, and culture.
நிகழ்ச்சி நிரல்
Date
Time
Title
Venue
- Friday, July 03, 2026
- 9:30 AM to 10.30 AM
- Voices of Tamil
- Room 1
- 11:00 AM – 12:15 PM
- Exhibition Opening
- -
- 1:25 PM - 2:15 PM
- Tamil Education in the Diaspora
- -
- 2:20 PM - 3:20 PM
- Teachers’ Workshops
- Room 1, 2, 3 & 4
- 3:25 PM - 4:30 PM
- Paper Presentation Sessions
- Room 1, 2 & 3
- Saturday, July 04, 2026
- 9:30 AM to 3:55 PM
- Paper Presentations
- Room 1, 2 & 3
- Sunday, July 05, 2026
- 10:00 AM to 12:20 PM
- Closing Ceremony
- -
* * * Lunch Break: 12 noon to 1:3o pm on Saturday and Sunday * * *
நிறைவு விழா - Closing Ceremony
நிறைவு விழா
Closing Ceremony
திருக்குறள் பாடல்
Thirukkural Singing
பட்டமளிப்பு விழா
Graduation Ceremony
விருந்தினர் நேர்காணல் - Guest Interviews
முனைவர். சுப்புலட்சுமி
Dr. Subbulakshmi
திரு. மாலன் நாராயணன்
Thiru. Maalan Narayanan
திரு. முத்துநெடுமாறன்
Thiru. Muthunedumaran
திருமதி. மதுரா இராஜகோபால்
Thirumathi. Madhura Rajagopal
முனைவர். மெய். சித்ரா
Dr. Mei. Chitra
Sponsors











Contact us via email for sponsorship – dtec2023@catamilcademy.org



















