கண்காட்சி
Exhibition
மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு நமது தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வையும் நுண்ணறிவையும் மேம்படுத்துதலே DTEC 2023 கண்காட்சியின் குறிக்கோள்.
இக்கண்காட்சி அரங்கில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியரின் வீரச்செயல்கள், கடையேழு வள்ளல்களின் அறக்கொடைகள், விடுதலைப் போராட்ட வீரர்களின் மறப்போர்கள் நிறைந்த தமிழகத்தின் சீரிய வரலாற்றினை மேலும் அறியலாம்.
தமிழக சிற்பங்கள், கோவில்கள், சின்னங்களின் மாதிரிப் படிவங்கள் மூலம் பழம்பெருமை வாய்ந்த தமிழர் கட்டடக் கலை குறித்துக் கற்கலாம்!
தமிழர் வாழ்க்கை முறை, இயல், இசை, நாடகம், விழாக்கள், விளையாட்டுகள், உழவு, உணவு பற்றி மேலும் அறியவும் தெளியவும் DTEC கண்காட்சிக்கு கண்டிப்பாக வருகை தாருங்கள்!