இரண்டாம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு - 2016
Second DIASPORA TAMIL EDUCATION CONFERENCE - 2016

இரண்டாம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு - 2016

முதலாம் மாநாட்டின் தொடர்ச்சியாக 2016ஆம் ஆண்டு, இரண்டாவது மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் மொழிக்கல்வி பற்றிய அடிப்படை கருத்துகள் அதற்கேற்ற பொருத்தமான அணுகுமுறைகள், மற்றும் அவற்றின் அடிப்படையில்உருவாக்கப்பட்ட மொழிக்கல்விக்கான உத்திகள் போன்ற கருப்பொருள்களில் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

இம்மாநாட்டில் பின்வரும் தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

  • மொழிக்கல்வி, மொழி எப்படி ஏற்கப்படுகிறது என்பது குறித்தான (Language acquisition) ஆய்வு முடிவுகளும் மொழியியலாளர்கள் கருத்துகள் பற்றிய கட்டுரைகளும்  சமர்ப்பிக்கப்பட்டன.
  • மொழிக்கல்வி அணுகுமுறைகள் – புலம்பெயர் பிள்ளைகளின் சூழ்நிலை, மொழிச்சூழலுக்கேற்ப தமிழை அவர்களுக்குக்  கொண்டு செல்லும் அணுகுமுறைகள் பற்றிய கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
  • மொழிக்கல்வி உத்திகள் – பரிந்துரைக்கப்பட்ட மொழிக்கல்வி கருத்துகள், அணுகுமுறைகளுக்கேற்ற பயிற்றுவிக்கும் உத்திகள் பற்றிய பயிலரங்குகள் நடத்தப்பட்டன.
  • பேச்சுத்தமிழா எழுத்துத்தமிழா என்னும் கருப்பொருளிலும் விவாதங்கள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
  • இலக்கணம் கற்றுத்தரும் வழிமுறைகள் பற்றிய பயிலரங்குகள் நடத்தப்பட்டன.
  • கற்றதை வெளிப்படுத்தும் வாய்ப்பாக மாணவர்களுக்கான தமிழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
  • அடுத்த தலைமுறையினரை தமிழ்க்கல்வி கற்பிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட ஊக்குவிக்கும் வழிகள்  பற்றி கலந்தாலோசிக்கப்பட்டன.

இரண்டாம் மாநாட்டின் தீர்மானங்கள்

முதலாம் புலம்பெயர்ந்தோர் மாநாட்டின் மூலம் கற்றவை மற்றும் பரிந்துரைகளால் மேற்கொண்ட தீர்மானங்கள். 

    • தமிழ்ப்பள்ளியின் புத்தகங்கள் அனைத்தையும் மின் புத்தகங்களாக மாணவர்களுக்கு அளிப்பது.
    • உலகத் தமிழ்க்கழகத்திற்கென பாடத்திட்டத்தை உருவாக்குதல்.
    • ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உலகத் தமிழ்க்கல்விக் கழகத்திற்கென புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. வகுப்பு ஆறு முதல் எட்டு வரைக்கான புத்தகங்கள் 2024ஆம் ஆண்டின் முடிவில் தயாராகும்.
    • அனுபவம் மிக்க ஆசிரியர்களைக்  கொண்டு அடிக்கடி பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல்.
    • ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூர், மலேஷியா, இந்தியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பயிற்சியாளர்களை வரவழைத்து பயிற்சி அளித்தல்.
    • அனுபவம் மிக்க ஆசிரியர்களை மட்டுமே கொண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களைப் பயிற்றுவிக்கும் முயற்சி எடுக்கப்படும்.
    • தமிழ்ப் பள்ளிக்கென வளைகுடாப்பகுதியில் தனி வளாகத்தை உருவாக்கும் முயற்சி எடுக்கப்படும்.
    • எங்கள் பள்ளியில் பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் தமிழ் கற்பிப்பதில் ஆர்வமுள்ள மாணவர்களை கொண்டு வீட்டுப்பாடத்திற்கு உதவ ஊக்குவித்தல்.
    • அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மற்ற நாடுகளில் உள்ள தமிழ்ப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட பாலம் அமைத்தல்.

கடந்த இரண்டு மாநாடுகள் மூலம் நாம் அடைந்த முக்கியமான நன்மைகள்

  • ஒலி வழி (Phonics) மூலம் எழுத்துகளைக் கற்பிக்கும் ஒரு பயனுள்ள வழியை எங்கள் ஆசிரியர்கள் கற்றுக் கொண்டனர்.
  • அழகாக கதை சொல்வதன் மூலம் மாணவர்களைத் தமிழில் உரையாட செய்வது எப்படி என்று அறிந்து கொண்டோம்.
  • எங்கள் புத்தகங்களை வலைதளத்தில் மின்புத்தகங்களாக பதிவேற்றம் செய்துள்ளோம். தற்போது அவற்றை (read along) புத்தகத்துடன் சேர்ந்து படிக்க வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இப்புத்தகங்களை 2023ஆம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டில் வெளியிடவுள்ளோம்.
  • 2017 – 2018ல் முற்போக்குத் தமிழ்க் கல்வி (Progressive method) என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை எங்கள் பள்ளி கிளைகளுள் ஒன்றில் வெற்றிகரமாக செயல்படுத்தியும் உள்ளோம். இந்த புதிய திட்டத்தின் நோக்கம் தமிழை வெகு இயல்பாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது. மேலும், முற்போக்கு தமிழ்க்கல்வி திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள்;
  1. தமிழ் கற்பதை மகிழ்ச்சியாகவும், சுவாரசியமாகவும் ஆக்குதல்.
  2. பேச்சுத் தமிழில் உரையாடல் திறனை வளர்த்தல்.
  • நாங்கள் எங்கள் பள்ளியில் பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் தமிழ் கற்பிப்பதில் ஆர்வமுள்ள மாணவர்களை துணை ஆசிரியர்களாக நியமித்துள்ளோம். அவர்கள் மற்ற மாணவர்களுக்கு உதவுவதோடு தமிழ் கற்பிப்பதற்கான கருவிகளை உருவாக்குவதிலும் உதவுகிறார்கள்.
  • கதைகள், நாடகங்கள், விளையாட்டுகள் போன்ற வேடிக்கையான செயல்பாடுகள் மாணவர்களுக்கு  தமிழைக் கற்பிக்க உதவுகிறது.