முதலாம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு - 2012
First DIASPORA TAMIL EDUCATION CONFERENCE - 2012

முதலாம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு - 2012

ஆய்வுக்கட்டுரைகள்

இம்மாநாட்டில் பின்வரும் தலைப்புகளில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

  • அயலகத்தில் தமிழ் என்னும் அமர்வில் மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ்க்கல்வி எப்படி நடத்தப்படுகின்றது என்கிற கட்டுரைகள்.
  • அயலகத்தில் தமிழ் மொழிச்சூழலும் பாடத்திட்ட உருவாக்கமும் என்னும் அமர்வில் சிங்கப்பூர், கனடா, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் எப்படி பாடத்திட்டங்களை உருவாக்கியுள்ளார்கள் என்கிற கட்டுரைகள்.
  • தமிழ் கற்பித்தலில் புதிய உத்திகள் என்னும் அமர்வில் இலக்கணத்தை ஆர்வத்துடன் கற்பித்தல், தமிழல்லாதவர்களுக்கு தமிழ் கற்பித்தல், தமிழை எளிமையாகக் கற்றுக்கொடுக்க தொழில்நுட்பங்கள், கருவிகள், சமூக இணையதளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் வழிகள் ஆகியவை குறித்த  கட்டுரைகள்.
  • சிக்கல்களும் தீர்வுகளும் என்னும் தலைப்பில் உச்சரிப்பு முறைகள்,கலாச்சாரம் பற்றிய அறிமுகம், பேச்சுப் பயிற்சி அளித்தல் போன்ற கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

ஆசிரியர் பயிலரங்குகள்

இம்மாநாட்டில் பின்வரும் தலைப்புகளில் ஆசிரியர்களுக்கானப்  பயிலரங்குகள் நடத்தப்பட்டன.

  • தமிழ் கற்கும் ஆர்வத்தை மேம்படுத்துதல் என்னும் பிரிவில் தமிழ்க்கல்வி கற்பித்தலில் உள்ள சவால்களை தீர்ப்பது, மாணவர்களுக்கு ஆர்வத்தை அதிகப்படுத்துவது, எளிய முறையில் எழுத்துகள் கற்றுக்கொடுப்பது, தமிழ்க் கற்றலில் மாணவர்களை ஈடுபடுத்துவது  போன்ற பயிற்சிகள்.
  • விளையாட்டுகள், மென்பொருள்கள், முகநூல், VoiceThread போன்ற சமூக வலைத்தளங்கள், மூலமாக  தமிழ்மொழியைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சிகள்.
  • பேச்சுத்தமிழ் கற்றுக்கொடுக்கும் உத்திகளுக்கான பயிற்சிகள்.

கருத்தரங்குகள்

பேச்சுத்தமிழா, எழுத்துத்தமிழா என்னும் தலைப்பில் தமிழறிஞர்கள் பங்குபெற்ற ஒரு கருத்தரங்கமும், சவால்கள், நோக்கங்கள், சாத்தியங்கள் என்னும் தலைப்பில் ஒரு கருத்தரங்கமும் நடத்தப்பட்டன. அதோடு தமிழ்ப் பள்ளி பட்டதாரிகள் அளித்த இளைஞர்கள் பார்வையில் தமிழ்க் கல்வி எனும் தலைப்பிலும் ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

கலை நிகழ்ச்சிகள்

மாணவர்களின் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டைப் பற்றிய புரிதலை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள்  நடத்தப்பட்டன.

முதலாம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

  • தரமான, எளிமையான முறையில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வியை இணையம் மூலமாக உலக அளவில் கொண்டு செல்லுதல்.
  • பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் உள்ள வேறுபாட்டை சரியான முறையில் கண்டறிந்து மாணவர்களிடம் கொண்டு செல்லுதல்.
  • தமிழ் கற்கும் – கற்பிக்கும் குழுமங்களுடன் இணைந்து

உலகத்தரமான கல்வியைப்  புதிதாகத்  தரப்படுத்தப்பட்ட வழிமுறைகள், கல்வித்திட்டம் ஆகியவற்றின் மூலமாக அனைவருக்கும் கொண்டு செல்லுதல்.

முதலாம் மாநாட்டின் மூலம் நாம் அடைந்த முக்கியமான நன்மைகள்

புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வியை இணையம் வழியாக உலக அளவில் கொண்டுசெல்லவும், புலம்பெயர்ந்த அனைத்து தமிழர்களையும், மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் பாலமாகவும் வலைவாசல் (Portal) உருவாக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்களில் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.