ஆய்வுக்கட்டுரைகள்

மாநாட்டின் சிறப்பு நிகழ்வு

எங்கள் எதிர்பார்ப்பிற்கும் அதிகமான கட்டுரைகள் கிடைக்கப்பெற்றுள்ளதால்,  இனிவரும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. தங்களுடைய ஒத்துழைப்பிற்கு நன்றி !

மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக,  பன்னாட்டுத் தமிழறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கப்பட உள்ளன. தாங்களும் அதில் பங்கேற்று,  கட்டுரை வழுங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆய்வுக்கட்டுரைகள் பின்வரும் தலைப்புகளை ஒட்டி அமைதல் வேண்டும்.

குறிக்கோள்

தமிழ் கற்பித்தல்/ தமிழ் கற்றல்  – திறன் (கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல்)  மேம்பாடு.

கட்டுரைத் தலைப்புகள் 

  • மொழிகற்பித்தல் மேம்பாட்டு உத்திகள்
  • கேட்டல், பேசுதல், எழுதுதல், வாசித்தல் திறன்களை ஒருங்கிணைத்தல் முறைகள்
  • மொழியைக் கையாள்வதற்கான புதிய அணுகுமுறைகள்
  • செயல்பாட்டு அடிப்படையில் கற்றல் உத்திகள்

உட்தலைப்புகள்

  • கேட்டல், பேசுதல், எழுதுதல், வாசித்தல் திறன்களும் இலக்கணக்கூறுகளும்
    கேட்டல், பேசுதல், எழுதுதல், வாசித்தல் திறன்களை இலக்கணக்கூறுகளோடு ஒருங்கிணைத்தலின் முக்கியத்துவம்
  • கேட்டல் திறனின் முக்கியத்துவம்
    மொழி கற்பித்தலில் கேட்டல் திறனுக்கான முக்கியத்துவமும் அத்திறனை வளர்த்துக்கொள்வதற்கான உத்திகளும்
  • உச்சரிப்புத்துல்லியத்திற்கான சிக்கல்கள், சவால்கள் மற்றும் தீர்வுகள்
    தமிழ் ஒலிகளைச் சரியான முறையில் ஒலிப்பதற்கான பயிற்சிகள், ஒலிப்பு முறைகளை அறிந்துகொள்வதில் உண்டாகும் சிக்கல்கள் மற்றும் சவால்கள், அவற்றிற்கான தீர்வுகள்.
  • மொழி கற்பித்தலில் வாசித்தல் பெறுமிடம்
    வாசித்தல் திறனை வளர்த்துக்கொள்வதற்கான உத்திகள், வேகமாக வாசித்தலுக்கன பயிற்சிகள், வாசித்துப்புரிந்துகொள்ளும் திறனை வளர்த்தல்
  • பிழையின்றி எழுதுதல்
    எழுத்துப்பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் நீக்கி எழுதுவதற்கான வழிமுறைகளைக் கற்பித்தல்
  • எழுத்து, பேச்சுத்தமிழ் வேறுபாடுகளைக் கற்பித்தலில் உள்ள சவால்களும் அவற்றை எதிர்கொள்ளும் வழிகளும்
    பேசும்பொழுது ஏற்படும் ஒலிமாற்றங்கள், ஒலித் திரிபுகள், ஒலி இழப்புகள் ஆகியவற்றை ஆசிரியர்கள் அறிந்து அவற்றிற்கேற்ப வகுப்பறைச் செயல்பாடுகளை அமைத்தல்
  • பண்பாட்டுக் கூறுகள் திறன்மேம்பாட்டில் பெறுமிடம்
    தமிழர் உணவு, விழாக்கள், கலைகள், இலக்கியங்கள் இன்ன பிறவற்றை அறிந்து அவற்றை மாணாக்கர் தம் கருத்துகளில் பொருத்தமாக வெளிப்படுத்துவதற்கான திறனை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள்
  • சொற்கள் அறிதிறன்
    சொற்களையும் அவற்றின் பயன்பாட்டினையும் அறிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்தும் திறனை வளப்படுத்துதல்
  • மொழித்திறன் மதிப்பீடு
    மாணாக்கர்தம் மொழித்திறனை மதிப்பிடும் முறைகள் – ACTFL, ILR, OPI இன்னபிற மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்தி மாணாக்கர்தம் மொழித்திறனை மதிப்பிடுதல்
  • மொழி கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு முறைகளில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு
    இன்றைய தேவைக்கேற்ப தொழில்நுடபத்தினைப் பயன்படுத்தி, மொழித்திறனை வளர்த்துக்கொள்ள மாணாக்கருக்கு உதவும் வழிமுறைகள். மாணாக்கர்தம் மொழித்திறனை மதிப்பீடு செய்தலில் தொழில் நுட்பத்தின் பயன்பாடு

கால வரையறை

  • ஆய்வுக் கட்டுரைச் சுருக்கம் கிடைக்கப்பெற வேண்டிய இறுதி நாள்: நவம்பர் 30, 2022
  • ஆய்வுக் கட்டுரைச் சுருக்கம்  12 எழுத்துருவில், 1.5 வரி இடைவெளியில், 300 சொற்களுக்குள்  ஒரு பக்க அளவில் அமைதல் வேண்டும்.
  • தமிழில் எழுதப்பெறும் கட்டுரைகள் தமிழ் ஒருங்குறியில் அமைதல் வேண்டும்
  • மாநாட்டில் வாசித்தளிக்கத் தேர்வுசெய்யப்பெற்ற கட்டுரைகள் குறித்து 2022 நவம்பர் மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும்.
  • கட்டுரைகள் முழுமையாக வடிவமக்கப்பெற்று, கிடைக்கப்பெற வேண்டிய இறுதி நாள் : பிப்ரவரி 1, 2023
  • ஏற்கப்பெற்ற/மறுக்கப்பெற்ற கட்டுரைகள் குறித்து 2023 மார்ச்சு 1க்குள் அறிவிக்கப்படும்.

குறிப்புகள்

  • கட்டுரைகள் கட்டுரைச் சுருக்கத்தின் விரிவாக்கமாக அமையப்பெறுதல் வேண்டும்.
  • கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்பெறலாம்.
  • கட்டுரைகள் 12 எழுத்துருவில், 1.5 வரி இடைவெளியில், 1500 சொற்களுக்குள் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அமைதல் வேண்டும். (தமிழில் எழுதப்பெறும் கட்டுரைகள் தமிழ் ஒருங்குகுறியில் அமைதல் வேண்டும்)
  • ஆய்வுக் கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரைகள் www.itadtec.org இல் மட்டுமே பதிவேற்றப்படல் வேண்டும்.
  • கட்டுரைச் சுருக்கங்கள் ஏற்கப்பட்டாலும் முழுமையான ஆயவுக்கட்டுரைகளே பரிசீலனை செய்யப்பெற்று, மாநாட்டில் வழங்குவதற்குத் தகுதியானவையாகத் தேர்வுசெய்யப்பெறும். கட்டுரைகளைத் தேர்வுசெய்யும் முறையில் உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் முடிவே இறுதியானது. தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுக்கட்டுரைகள் விழா மலரில் வெளியிடுவதற்கான உரிமம் பெற்றவையாகக் கொள்ளப்படும்.

கட்டுரை வாசித்தல்

  • ஏற்கப்பெற்ற கட்டுரைகள், தமிழிலோ ஆங்கிலத்திலோ மாநாட்டில் வழங்கப்பெறலாம்.
  • கட்டுரைகளை மாநாட்டில் வழங்குவதற்கான நேரம் : 20 மணித்துளிகள்
  • PPT/பிற மென்பொருள்/ தொழில் நுட்ப அமைப்பினைப் பயன்படுத்த விரும்புவோர் அவற்றை 2023 ஏப்பிரல் 1ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
 

மேலும் விபரங்களுக்கு, dtec2023.papers at catamilacademy dot org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்